குடும்ப பாதுகாப்பு நிதியை உயர்த்தக்கோரி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் தர்ணா


குடும்ப பாதுகாப்பு நிதியை உயர்த்தக்கோரி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் தர்ணா
x

குடும்ப பாதுகாப்பு நிதியை உயர்த்தக்கோரி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

திருச்சி

திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் தியாகராசன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு அமலோற்பவம், ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை தலைவர் தங்கவேலு போராட்டத்தை தொடங்கி வைத்தார். அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அறிவித்த தேதி முதல் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். மத்திய அரசு வழங்குவதை போல் மருத்துவ படியை ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடைபெற்றது. முடிவில் தமிழ்நாடு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் சிராஜுதீன் போராட்டத்தை முடித்து வைத்தார். மாவட்ட இணை செயலாளர் டெரன்ஸ் நன்றி கூறினார்.


Next Story