வருவாய்த்துறை ஊழியர்கள் பேட்ஜ் அணிந்து போராட்டம்


வருவாய்த்துறை ஊழியர்கள் பேட்ஜ் அணிந்து போராட்டம்
x
தினத்தந்தி 21 Sept 2023 1:45 AM IST (Updated: 21 Sept 2023 1:46 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீலகிரியில் வருவாய்த்துறை ஊழியர்கள் பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தினார்கள்.

நீலகிரி

கூடலூர்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீலகிரியில் வருவாய்த்துறை ஊழியர்கள் பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தினார்கள்.

மகளிர் உரிமைத்தொகை திட்டம்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்திற்கு தனி பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும், கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரின் ஊழியர் விரோத போக்கு மீது விசாரணை நடத்த வேண்டும், வருவாய்த்துறை அலுவலர்கள் மீது பதிவு செய்த வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது.

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கூடலூர், குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர், பந்தலூர் பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களில் பணியாற்றும் வருவாய்த்துறையினர் நேற்று கோரிக்கைகள் குறிப்பிடப்பட்டு இருந்த பேட்ஜ் அணிந்தவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் வருவாய்த்துறையினரின் நியாயமான கோரிக்கைகளை மாநில அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ேமலும் தங்களது அலுவலக பணிகளை வழக்கம்போல் மேற்கொண்டனர்.

அடுத்த கட்ட போராட்டம்

இதுகுறித்து வருவாய்த்துறையினர் கூறியதாவது:-

வருவாய்த்துறையினரின் நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உள்ளது. இதில் சில உடன்படிக்கை ஏற்பட்டு உள்ள நிலையில், அதை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி வருகிறோம். மேலும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தால் வருவாய்த்துறையினருக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த திட்டத்திற்கு தனி பணியிடங்களை உருவாக்க வேண்டும்.

இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் வருவாய்த்துறை ஊழியர்கள் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும். இதை வலியுறுத்தி 2 நாட்கள் கோரிக்கைகள் அடங்கிய பேட்ஜ் அணிந்து பணியாற்றுவோம். உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story