வருவாய்த்துறை கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
கரூரில், வருவாய்த்துறை கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர்
தூத்துக்குடி மாவட்டம், முறப்பாடு அருகே மணல் கடத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்த கோவில் பத்து கிராம நிர்வாக அதிகாரி லூர்துபிரான்சிஸ் படுகொலை செய்யப்பட்டார். இதனை கண்டித்து நேற்று கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கிராம நிர்வாக முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் நாகமணி தலைமை தாங்கினார். இதேகோரிக்கையை வலியுறுத்தி புகழூர் தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட பொருளாளர் ராஜ்கமல் தலைமையில் புகழூர் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story