வருவாய்த்துறை அதிகாரி வீட்டில் 10 பவுன் நகைகள் திருட்டு


வருவாய்த்துறை அதிகாரி வீட்டில் 10 பவுன் நகைகள் திருட்டு
x

வருவாய்த்துறை அதிகாரி வீட்டில் 10 பவுன் நகைகள் திருட்டுபோனது.

திருச்சி

திருச்சி:

10 பவுன் நகைகள் திருட்டு

திருச்சி கருமண்டபம் கல்யாணசுந்தரம் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 58). வருவாய்த்துறை அதிகாரியான இவர் கடந்த 4-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னைக்கு சென்று இருந்தார். நேற்று முன்தினம் காலை மீண்டும் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பின்பக்க கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது அங்கு பீரோவில் வைத்திருந்த தங்க சங்கிலி, வளையல், தோடு உள்பட 10 பவுன் நகைகள் திருட்டு போயிருந்தது ெதரியவந்தது.

போலீசார் விசாரணை

இது குறித்து ராஜேந்திரன் செசன்ஸ் கோர்ட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தி, திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story