வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்


வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 March 2023 12:15 AM IST (Updated: 13 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலம் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு வட்ட தலைவர் ஆனந்தகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் சக்திவேல் முன்னிலை வகித்தார். இதில் வருவாய்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு, கடந்த 4 ஆண்டுகளாக வெளியிடப்படாமல் உள்ள சப்-கலெக்டர் பட்டியலை உடனே வெளியிட வேண்டும். அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், இளநிலை, முதுநிலை வருவாய் ஆய்வாளர் பதவியை பெயர் மாற்ற அரசாணை வெளியிட வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வருவாய்த்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story