வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
தேனி
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் வடிவேல் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, திருச்சி மாவட்டம் துறையூர் நரசிங்கபுரம் பகுதியில் மணல் கொள்ளையை தடுத்த துறையூர் வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்தும், தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்வதோடு, இதற்கு தொடர்புடைய ஊராட்சி மன்ற தலைவரின் பதவியை பறிக்க வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story