வருவாய் கிராம ஊழியர் சங்க செயற்குழு கூட்டம்
தியாகதுருகத்தில் வருவாய் கிராம ஊழியர் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது.
தியாகதுருகம்,
தியாகதுருகத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் வெங்கடேசன், மூத்த உறுப்பினர் ராமசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் வேலுமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் திருமலைவாசன், துணைத்தலைவர் பாலுசாமி, விழுப்புரம் மாவட்ட தலைவர் லட்சுமணன் ஆகியோர் கலந்துகொண்டு நடந்து முடிந்த 50-வது பொன் விழா, மாநில பிரதிநிதிகள் மாநாடு பற்றியும், சங்க வளர்ச்சிகள் குறித்தும் பேசினர்.
இதில் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், கல்வராயன்மலை, திருக்கோவிலூர், வாணாபுரம் ஆகிய வட்டாரங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.