வருவாய் கிராம ஊழியர் சங்க செயற்குழு கூட்டம்


வருவாய் கிராம ஊழியர் சங்க செயற்குழு கூட்டம்
x
தினத்தந்தி 2 Oct 2023 12:15 AM IST (Updated: 2 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தியாகதுருகம் அருகே வருவாய் கிராம ஊழியர் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது.

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம்,

தியாகதுருகம் அருகே நாகலூர் கிராமத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க வட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு வட்ட தலைவர் செம்மலை தலைமை தாங்கினார். மூத்த சங்க உறுப்பினர் ராமசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட செயலாளர் பிரகாஷ் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத்தலைவர் பால்சாமி, விழுப்புரம் மாவட்ட தலைவர் ஆதிலட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டு வருகிற 2024-ம் ஆண்டு சென்னையில் நடைபெறும் சங்க மாநில மாநாட்டில் திரளாக கலந்து கொள்வது மற்றும் சங்க வளர்ச்சி பணிகள் பற்றியும் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் மாவட்ட தலைவர் வெங்கடேசன், செயலாளர் ரவிச்சந்திரன், துணைத் தலைவர் கு.வெங்கடேசன், சங்கராபுரம் வட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், நிர்வாகிகள், சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட பொருளாளர் செந்தில் நன்றி கூறினார்.


Next Story