அனைத்து துறை செயல் திட்டம் குறித்து ஆய்வுக்கூட்டம்


அனைத்து துறை செயல் திட்டம் குறித்து ஆய்வுக்கூட்டம்
x

அனைத்து துறை செயல் திட்டம் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

கரூர்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட தரிசு நில தொகுப்புகள் அனைத்து துறை செயல் திட்டம் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ், 2021-22-ம் ஆண்டில் 46 பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த பஞ்சாயத்துகளில் சாகுபடி செய்யாத 15 ஏக்கர் வரை தரிசாக உள்ள தொகுப்பு நிலங்கள் 80 எண்கள் அடையாளம் கண்டறியப்பட்டன. இந்த தரிசு நில தொகுப்புகளில் ஒவ்வொன்றிற்கும் பயிர் சாகுபடி திட்டத்தினை தயாரித்து மேற்கொள்ள வேண்டிய ஒருங்கிணைப்பு பணிகள் மூலம் அபிவிருத்தி செய்திடவும் தரிசுநில தொகுப்பில் உள்ள அனைத்து விவசாயிகளும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தில் பங்குபெறும் விதமாக விவசாயிகள் வருமானத்தை உறுதி செய்திடவும், ஒவ்வொரு தரிசுநில தொகுப்பு வாரியாகவும் விளைநிலங்களாக மேற்கொண்டுள்ள பணிகள் குறித்தும், தேர்வு செய்யப்பட்டுள்ள விவசாயிகளின் விளை நிலங்களில் பயிரிடுவதற்கான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திடவும், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ஆழ்குழாய் கிணறு, மாட்டு கொட்டகை, ஆட்டுக்கொட்டகை அமைத்திடவும், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மாடுகள், ஆடுகள், கோழிகள் வழங்குவதற்கான ஏற்பாடு செய்திடவும், மேலும் விவசாயிகளின் வாழ்வதாரத்தை உயர்த்துவதற்கான அனைத்து அடிப்படை வசதிகளை உருவாக்கிடவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.


Next Story