வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்


வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்
x

வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது

திருப்பத்தூர்

வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் பிரதம மந்திரி வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட வீடுகளின் கட்டுமான பணிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள், நமக்கு நாமே திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் சிறுசிறு பணிகளை இம்மாத இறுதிக்குள் முடிக்கப்பட வேண்டும். மாவட்டத்தில் நடைபெற்று வருகின்ற வளர்ச்சி பணிகள் அனைத்தையும், தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழைகாலங்களுக்கு முன்பு முடிக்கப்பட வேண்டும். அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை எந்தவொரு கடைகளிலும் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஹரிஹரன், உதவி இயக்குனர் (தணிக்கை) பிச்சாண்டி, உதவி திட்ட அலுவலர் ஆப்தாபேகம், உதவி செயற் பொறியாளர்கள் மகேஷ்குமார், பழனிசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

1 More update

Next Story