அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்த ஆய்வு கூட்டம்
அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்த ஆய்வு கூட்டம்அரசு முதன்மை செயலர் தீரஜ்குமார் தலைமையில் நடந்தது.
அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்த ஆய்வு கூட்டம்அரசு முதன்மை செயலர் தீரஜ்குமார் தலைமையில் நடந்தது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் முருகேஷ் முன்னிலை வகித்தார். அரசு முதன்மைச் செயலரும், வணிக வரித்துறை ஆணையர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான தீரஜ்குமார் தலைமை தாங்கி பேசுகையில், ''வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ளதால் அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். ஏரி, குளங்களுக்கு நீர் வரத்து கால்வாய்கள் தூர் வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் அரசின் திட்டப்பணிகளை சிறப்பான முறையில் செயல்படுத்தி பயனாளிகளுக்கு சென்றடைய அனைத்து துறை அலுவலர்களும் முனைப்புடன் செயல்பட வேண்டும். அரசின் திட்டப்பணிகளை போர்க்கால அடிப்படையில் விரைந்து முடிக்க வேண்டும்'' என்றார்.
தொடர்ந்து வேளாண்மை, வருவாய்த்துறை, பள்ளிக்கல்வித்துறை, நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி, பேரூராட்சிகள் உள்ளிட்ட துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பணி விவரங்களை கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) வீர்பிரதாப் சிங், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, செய்யாறு சப்- கலெக்டர் அனாமிகா, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் வெற்றிவேல், திருமால், திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) சையத்சுலைமான், செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி) ராமகிருஷ்ணன், உதவி கலெக்டர் மந்தாகிரி, தனலட்சுமி மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.