ஊரக வளர்ச்சி திட்டப்பணிகள் ஆய்வு கூட்டம்


ஊரக வளர்ச்சி திட்டப்பணிகள் ஆய்வு கூட்டம்
x

பாபநாசம் ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி திட்டப்பணிகள் ஆய்வு கூட்டம் நடந்தது.

தஞ்சாவூர்

பாபநாசம்:

பாபநாசம் ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி துறை திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய ஆணையர் சிவக்குமார் தலைமை தாங்கினார். கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் சுதா முன்னிலை வகித்தார். இதில் ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்தும், அலுவலக நிர்வாகம் குறித்தும், ஊரக வளர்ச்சி துறை அலுவலருடன் ஆய்வு நடத்தப்பட்டது. கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயகுமார், சுகுமார், சுமதி, பாலசுப்பிரமணியன், முரளிதரன், தட்சிணாமூர்த்தி, ராஜம், கண்ணன், அருளாளன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story