நெல் விவசாய பணி தீவிரம்


நெல் விவசாய பணி தீவிரம்
x

ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் நெல் விவசாய பணி தீவிரம் அடைந்து உள்ளது.

ராமநாதபுரம்

ஆர்.எஸ்.மங்கலம்,

ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் நெல் விவசாய பணி தீவிரம் அடைந்து உள்ளது.

நெல் விவசாயம்

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள மங்கலம், நாரல், சோழந்தூர், கழனிக்குடி, கற்காதக்குடி, ஆனந்தூர் உள்ளிட்ட பல கிராமங்களில் விவசாயம் நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் பருத்தி மற்றும் மிளகாய் சீசன் முடிவடைந்த நிலையில் ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றியுள்ள பல ஊர்களிலும் விவசாயிகள் நெல் விதைப்புக்கான பணிகளை தொடங்கிவிட்டனர். அதிலும் தற்போது ஆர்.எஸ். மங்கலம் பெரிய கண்மாய்க்கும் வைகை தண்ணீர் வரத்து தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் விவசாயிகள் விவசாய பணியில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பூச்சி மருந்து அடிக்கும் பணி

பருத்தி செடி நடவு செய்யப்பட்டிருந்த விவசாய நிலங்களை முழுமையாக சுத்தம் செய்து டிராக்டர் மூலம் உழுது வருகின்றனர்.

மேலும் அந்த இடத்தில் புல் மற்றும் களை செடிகள் வளராமல் இருக்க பூச்சி மருந்து அடிக்கும் பணியிலும் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இது பற்றி விவசாயி சேதுராமன் கூறும் போது. கடந்தாண்டு ஆர்.எஸ். மங்கலத்தை சுற்றியுள்ள பல கிராமங்களில் நெல் விவசாயம் எதிர்பார்த்ததை விட விளைச்சல் நன்றாகவே இருந்தது.

இந்த ஆண்டும் நெல் விவசாயம் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்ப்பில் உள்ளோம். நெல் விதை தூவ உள்ளதால் அந்த இடத்தில் புல் மற்றும் களை செடிகள் வளராமல் இருப்பதற்காக மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றோம் என்றார்.


Related Tags :
Next Story