தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு மாரத்தான் போட்டி


தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
x
தினத்தந்தி 13 Oct 2023 12:15 AM IST (Updated: 13 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது.

கள்ளக்குறிச்சி

வாணாபுரம்:

அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது. மாணவர்கள் பங்கேற்ற மாரத்தான் போட்டியை பகண்டை கூட்டு ரோடு சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தொடங்கி வைத்தார். மாணவிகள் பங்கேற்ற பெருநடை போட்டியை கல்லூரி முதல்வர் ரேவதி தொடங்கி வைத்தார். கல்லூரியில் தொடங்கிய மாரத்தான்போட்டி வாணாபுரம், பகண்டை கூட்டுரோடு வழியாக சென்று மீண்டும் கல்லூரியை வந்தடைந்தது. இந்த போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.


Next Story