தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு ஊர்வலம்


தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு ஊர்வலம்
x

தஞ்சையில் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சை மண்டல நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் - 2005 விதிகள் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலம் தஞ்சையில் நேற்று நடைபெற்றது. ஊர்வலத்திற்கு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் தஞ்சை மணிமண்டபம் நுழைவு வாயில் அருகே இருந்து தொடங்கியது. ஊர்வலம் பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு ரவுண்டானா வரை சென்று மீண்டும் அதே வழியாக வந்து அரசு தொழிற்பபயிற்சி நிலைய விளையாட்டு மைதானத்தை வந்தடைந்தது. இந்த ஊர்வலகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நுகர்பொருள் வாணிப கழக அலுவலர்கள், பணியாளர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகைள ஏந்தியபடி சென்றனர்.


Next Story