கம்பைநல்லூர் அருகே சனத்குமார் நதி தரைப்பாலம் மூழ்கியது பொதுமக்கள் அவதி; மேம்பாலம் அமைக்க கோரிக்கை


கம்பைநல்லூர் அருகே  சனத்குமார் நதி தரைப்பாலம் மூழ்கியது  பொதுமக்கள் அவதி; மேம்பாலம் அமைக்க கோரிக்கை
x
தினத்தந்தி 18 Oct 2022 6:45 PM GMT (Updated: 18 Oct 2022 6:45 PM GMT)

கம்பைநல்லூர் அருகே சனத்குமார் நதி தரைப்பாலம் மூழ்கியது பொதுமக்கள் அவதி; மேம்பாலம் அமைக்க கோரிக்கை

தர்மபுரி

மொரப்பூர்:

கம்பைநல்லூர் அருகே சனத்குமார் நதியின் தரைப்பாலம் மூழ்கியதால் பொதுமக்கள் அவதியடைந்தனர். தரைப்பாலத்தை மேம்பாலமாக மாற்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.

சனத்குமார் நதி

தர்மபுரி அருகே ஓடை உருவாகி பட்டகப்பட்டியில் உள்ள சனத்குமார் நதியில் கலந்து கம்பைநல்லூர், கெலவள்ளி வழியாக கூடுதுறைப்பட்டி அருகே தென்பெண்ணை ஆற்றில் சனத்குமார் நதியின் தண்ணீர் கலக்கிறது.

இந்த சனத்குமார் நதி கெலவள்ளி- கே.ஈச்சம்பாடி இடையே கடந்து செல்கிறது. இந்த பகுதியில் சனத்குமார் நதியின் குறுக்கே தரைமட்ட பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் இருபுறங்களிலும் பாதுகாப்பு சுவர்கள் இன்றியும், பழுதடைந்தும் காணப்படுகிறது.

கோரிக்கை

தற்போது பெய்து வரும் மழையால் வெள்ளம் ஆர்ப்பரித்து தரைப்பாலத்திற்கு மேலே சென்றதால் கே.ஈச்சம்பாடி, கே. ஈச்சம்பாடி அணை, கே.ஈச்சம்பாடி காலனி, சொர்ணம்பட்டி, ஒட்டுப்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

எனவே பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நலன்கருதி கெலவள்ளி- கே.ஈச்சம்பாடி இடையே சனத்குமார் நதியின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story