விபத்துக்களை தடுக்க சாலையோர தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரம்


விபத்துக்களை தடுக்க சாலையோர தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரம்
x
திருப்பூர்


நெடுஞ்சாலைத்துறை சார்பாக, ரூ.30 லட்சத்தில் சி.ஆர்.ஐ.டி.பி. திட்டத்தில் சாலை பாதுகாப்புத் திட்டத்தில் உலோக தடுப்புகள் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. இதற்கான அரசாணை 2022 செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 2023 பிப்ரவரி 1-ந்தேதி டெண்டர் விடப்பட்டு, ஒப்பந்ததாரர்கள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மடத்துக்குளம் பகுதியில் தற்பொது 30 இடங்களில் பணிகள் தொடங்கப்பட உள்ளது. அதில் முதற்கட்டமாக அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதியான கணியூர்-காரத்தொழுவு சாலையில் உலோகத் தடுப்புகள் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இதனையடுத்து செக்கான் ஓடை உள்ளிட்ட பகுதிகளில் படிப்படியாக உலோகத்தடுப்புகள் அமைக்கப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பல விபத்துக்கள் நடைபெற்ற காரத்தொழுவு பகுதியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான உலோகத்தடுப்புகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Next Story