சாலை விழிப்புணர்வு பேரணி


சாலை விழிப்புணர்வு பேரணி
x

அம்பையில் சாலை விழிப்புணர்வு பேரணி நடந்தது.

திருநெல்வேலி

அம்பை:

அம்பையில் நாட்டு நலப்பணிதிட்ட மாணவர்கள் சார்பில் சாலை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அம்பை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இருந்து இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. பேரணியை தொடங்கி வைத்தார்.

இதில் கல்லிடைக்குறிச்சி திலகர் வித்யாலயா பள்ளி, விக்கிரமசிங்கபுரம் சேனை தலைவர் பள்ளி, தூய மரியன்னை பள்ளி மாணவர்கள் பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்றனர். முன்னதாக வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ராஜசேகர், அம்பை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார், மாவட்ட நாட்டு நலப்பணிதிட்ட தொடர்பு அலுவலர் ஆறுமுகசாமி, சாலை பாதுகாப்பு முகமை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சலீம் ஆகியோர் சாலை விழிப்புணர்வு பற்றிய ஆலோசனைகள் வழங்கினர். நிகழ்ச்சியை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சாகுல் உசேன் தொகுத்து வழங்கினார். முடிவில், சிவபாலா நன்றி கூறினார்.

1 More update

Next Story