அரசு பஸ்சை மறித்து மாணவ-மாணவிகள் சாலை மறியல்


அரசு பஸ்சை மறித்து மாணவ-மாணவிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 13 Dec 2022 6:45 PM GMT (Updated: 13 Dec 2022 6:45 PM GMT)

தரங்கம்பாடி அருகே, பள்ளி நேரத்தில் நிறுத்தாமல் செல்வதாக கூறி அரசு பஸ்சை மறித்து மாணவ-மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை

குத்தாலம்:

தரங்கம்பாடி அருகே, பள்ளி நேரத்தில் நிறுத்தாமல் செல்வதாக கூறி அரசு பஸ்சை மறித்து மாணவ-மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

நாகையில் இருந்து காரைக்கால், திருவிளையாட்டம் வழியாக மயிலாடுதுறை செல்லும் அரசு பஸ் காலை 8.45 மணியளவில் திருவிளையாட்டம் பகுதிக்கு வருவது வழக்கம். இந்த பஸ் சமீபகாலமாக திருவிளையாட்டம் பகுதியில் பள்ளி நேரத்தில் நிற்காமல் செல்வதாக மாணவ-மாணவிகள் குற்றச்சாட்டு தெரிவித்து வந்தனர்.இதனால் மயிலாடுதுறை, செம்பனார்கோவில், பூம்புகார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.இந்த நிலையில் நேற்று திருவிளையாட்டத்திற்கு வந்த அரசு பஸ்சை 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மழை பெய்ததால் கொட்டும் மழையில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொறையாறு போக்குவரத்து பணிமனை கழக மேலாளர் ஜெயக்குமார் மற்றும் பெரம்பூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது திருவிளையாட்டம் பகுதியில் அரசு பஸ் நின்று செல்லும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.இதில் உடன்பாடு ஏற்பட்டதால் மாணவ-மாணவிகள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் செம்பனார்கோவில்-அரும்பாக்கம் சாலையில் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story