சாலை அமைக்கும் பணி


சாலை அமைக்கும் பணி
x

சுவாமிமலை அருகே காவிரி கரையோரம் ரூ.60 கோடியில் சாலை அமைக்கும் பணி நடந்தது.

தஞ்சாவூர்

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலுக்கு நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலுவிடம் கல்யாணசுந்தரம் எம்.பி. காவிரி கரையோரம் சாலைகள் அமைப்பதற்கு கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்று தாத்தா கோவிலிலிருந்து கணபதி அக்ரஹாரம் வரை காவிரி கரையோரம் ரூ.60 கோடி மதிப்பீட்டில் 14 கிலோமீட்டர் வரை சாலைகள் அமைப்பதற்கு பணிகள் நடைபெற உள்ளது. முதல் கட்டமாக சுவாமிமலை போலீஸ் நிலையத்திலிருந்து அலவந்திபுரம் வரை 1½ கிலோ மீட்டருக்கு ரூ.6 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற உள்ளன. இந்த பணிகளை கல்யாணசுந்தரம் எம்.பி. நேற்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது கோட்ட கிராம சாலை பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர்கள் சரவணன், முத்துக்குமார், பொதுப்பணித்துறை அலுவலர் முத்துசாமி, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் முத்து செல்வம், மாவட்ட திட்ட குழு உறுப்பினர் தாமரைச்செல்வன் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story