பல்லாங்குழியான திருப்புவனம்-கலியாந்தூர் சாலை
திருப்புவனம்-கலியாந்தூர் சாலை சேதம் அடைந்துள்ளது.
சிவகங்கை
திருப்புவனம்,
திருப்புவனத்தில் இருந்து புல்வாய்க்கரை செல்லும் நெடுஞ்சாலை உள்ளது. திருப்புவனத்தில் இருந்து 1 கி.மீ. தொலைவில் அந்த சாலையில் கலியாந்தூர் செல்லும் சாலை உள்ளது. இது குண்டும், குழியுமாக காணப்படுகிறது. கலியாந்தூர், மாங்குடி, அம்பலத்தாடி, கீழவெள்ளூர், மேலவெள்ளூர் உள்பட பல கிராம மக்கள் இந்த சாலையில்தான் சென்று வருகின்றனர். மேலும் இப்பகுதி விவசாயம் நிறைந்த பகுதியாகும். இதனால் தங்கள் விளை பொருட்களை வாகனங்களில் கொண்டு செல்ல விவசாயிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
இந்த கலியாந்தூர் சாலை ஆரம்பம் முதல் முடியும் வரை பல்லாங்குழி போன்று ஆங்காங்கே பள்ளமும், மேடுமாக உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. எனவே, இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story