சாலையை அளவீடும் பணி தீவிரம்


சாலையை அளவீடும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 22 Sep 2022 6:45 PM GMT (Updated: 2022-09-23T00:15:34+05:30)

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சாலையை அளவீடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கோயம்புத்தூர்

ஆனைமலை

ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. திருவிழா நேரங்களில் நெல்லுகுத்துபாறை பகுதியில் இருந்து கோவிலுக்கு செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதையடுத்து போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், ஆனைமலை மாசாணியம்மன் கோவில், நெல்லுகுத்து பாறை போன்ற பகுதிகளில் ஜி.பி.எஸ். கருவி மூலம் நெடுஞ்சாலைத்துறையினர் சாலையை அளவீடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அளவீடும் பணிகள் முடிந்த பின்னர், சாலையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரி கவுசல்யா தெரிவித்தார்.


Next Story