ரூ.9¾ லட்சத்தில் தார்ச்சாலையை மேம்படுத்தும் பணி
ரூ.9¾ லட்சத்தில் தார்ச்சாலையை மேம்படுத்தும் பணி தொடங்கியது.
பேராவூரணி ஒன்றியம் மடத்திக்காடு ஊராட்சியில் உள்ள உப்புவிடுதி கிராமத்தில் உள்ள சாலை குண்டும் குழியுமாக காணப்பட்டது. இதனை சீரமைக்க வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர் சுதாசினி சுப்பையன் மற்றும் கிராம மக்கள் பேராவூரணி அசோக்குமார் எம்.எல்.ஏ. விடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அவர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.9 லட்சத்து 78 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து தார்ச்சாலையை மேம்படுத்த உத்தரவிட்டார். இதற்கான பூமி பூஜை நேற்று காலை உப்புவிடுதி கிராமத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அசோக்குமார் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் சுதாசினி சுப்பையன், துணைத் தலைவர் சசிகுமார், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் அப்துல் மஜீத், பேராவூரணி வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் இளங்கோவன், உப்புவிடுதி கிளைச் செயலாளர் முருகேசன், மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் மணிவண்ணன், அவைத் தலைவர் கருப்பையன், ஒன்றிய பிரதிநிதி மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.