சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு


சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
x
தினத்தந்தி 14 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-15T00:17:09+05:30)

கல்லாமொழி பகுதியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

கல்லாமொழி பகுதியில் துறைமுகம், அனல்மின்நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. துறைமுக வளாகம் சார்பில் சாலை பாதுகாப்பை வலியுறுத்தி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தமிழ்நாடு மின்சார வாரிய முதன்மை பொறியாளர் நவசக்தி தலைமை தாங்கினார். துறைமுக வளாக திட்ட மேலாளர் தியோடர் பால் முன்னிலை வகித்து சாலையில் சென்ற மோட்டார் சைக்கிள், கார், வேன் டிரைவர்களிடையே சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி ரோஜா பூ, இனிப்புகள் வழங்கினார். இதில் மின்சாரவாரிய அலுவலர்கள், துறைமுக வளாக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story