சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி


சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

செங்கோட்டை அருகே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை உட்கோட்ட நெடுஞ்சாலை துறை சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கணக்கப்பிள்ளைவலசையில் நடந்தது. நிகழ்ச்சிக்கு செங்கோட்டை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கணேஷ்குமார் தலைமை தாங்கினார். இளநிலை பொறியாளர் முத்துராஜ் முன்னிலை வகித்தார்.

தென்காசி போக்குவரத்து சிறப்பு காவல் ஆய்வாளர் மணி, ஜே.பி. பொறியியல் கல்லூரி சிவில் பொறியியல் துறை தலைவர் பழனி, இலத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் வழங்கினர். மேலும் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு இனிப்பு மற்றும் பூக்கள் வழங்கினர். இதேபோல் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு அறிவுரை கூறி இலவசமாக ஹெல்மெட் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கணக்கப்பிள்ளைவலசை ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரி, துணைத்தலைவர் ராமஜெயம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story