சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
பள்ளிக்கூடத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் சாலை பாதுகாப்பு மற்றும் போதை பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நேற்று தாழையூத்து சங்கர் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு தாழையூத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார்.
அவர் பேசும் போது, சாலை பாதுகாப்பு குறித்தும், போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் விளக்கி பேசினார். அப்போது பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு 1098 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று கூறினார்.
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.