3 கோடியில் சாலை விரிவாக்கம்


3 கோடியில் சாலை விரிவாக்கம்
x

கோழிப்பண்ணையில் இருந்து சேத்துமடை வரை 3 கோடியில் சாலை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது

கோயம்புத்தூர்

ஆனைமலை

பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை பகுதியில் மாசாணி அம்மன் கோவில் மற்றும் பரம்பிக்குளம், டாப்சிலிப் உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலமாக உள்ளன. இதனால் வெளிமாநிலங்களில் இருந்து அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின் றனர். இதனால் சேத்துமடை ரோட்டில் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும்.

எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் சாலையை விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து சாலையை விரிவாக்கம் செய்ய திட்ட அறிக்கை தயார் செய்தனர்.

அதன் அடிப்படையில் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.3.9 கோடி செலவில் ஆனைமலையை அடுத்த கோழிப்பண்ணையில் இருந்து சேத்துமடை வரை 2 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

இதன் மூலம் தற்போது 5.5 மீட்டராக உள்ள அந்த சாலை 7 மீட்டர் வரை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. அதற்கான பணிகள் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story