ஆனைமலை அருகே சாலை விரிவாக்கப்பணி: மரம் வேருடன் பிடுங்கி மறுநடவு


ஆனைமலை அருகே சாலை விரிவாக்கப்பணி: மரம் வேருடன் பிடுங்கி மறுநடவு
x
தினத்தந்தி 18 Nov 2022 12:15 AM IST (Updated: 18 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஆனைமலை அருகே சாலை விரிவாக்கப்பணி: மரம் வேருடன் பிடுங்கி மறுநடவு

கோயம்புத்தூர்

ஜமீன் ஊத்துக்குளி

ஆனைமலை அடுத்த குஞ்சிபாளையம் பிரிவு பொள்ளாச்சி - மின்கரை சாலையில் போக்குவரத்து நெரிசலால் சாலை விரிவாக்கம் செய்ய நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டது. இதையடுத்து கடந்த சில நாட்களாக சாலை விரிவாக்கம் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 8 வயது உடைய வேப்ப மரம் சாலை விரிவாக்க பணிக்கு இடையூறாக இருந்தது. இதனை வெட்டி அகற்றாமல் பிடுங்கி வேறு இடத்தில் நட சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தினர். அதன்படி அந்த மரத்தை வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் மறு நட முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து பொக்லைன் எந்திரம் மற்றும் கிரேன் உதவியுடன் வேப்ப மரம் வேருடன் பிடுங்கி அருகில் உள்ள பகுதியில் குழி தோண்டி அங்கு நடப்பட்டது. மேலும் மரத்தின் வேர் பகுதி கரையான் அரிக்காமல் இருக்க மருந்து தெளிக்கப்பட்டது. இந்த பணிகளில் உதவி கோட்ட பொறியாளர் ஹுசேன், நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.


Next Story