ஈரோடு ரெயில்வே நுழைவு பாலத்தில் ரூ.50 லட்சம் செலவில் சாலை சீரமைக்கும் பணி- நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல்


ஈரோடு ரெயில்வே நுழைவு பாலத்தில் ரூ.50 லட்சம் செலவில் சாலை சீரமைக்கும் பணி- நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல்
x

ஈரோடு ரெயில்வே நுழைவு பாலத்தில் ரூ.50 லட்சம் செலவில் சாலை சீரமைக்கும் பணிகள் நடைபெற உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஈரோடு

ஈரோடு

ஈரோடு ரெயில்வே நுழைவு பாலத்தில் ரூ.50 லட்சம் செலவில் சாலை சீரமைக்கும் பணிகள் நடைபெற உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரெயில்வே நுழைவு பாலம்

ஈரோடு காளைமாட்டுசிலை பகுதியில் இருந்து கொல்லம்பாளையம் செல்லும் பகுதியில் ரெயில்வே நுழைவு பாலம் உள்ளது. இந்த வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. அங்கு சிமெண்டு மூலமாக சாலை அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமப்பட்டு வருகிறார்கள்.

மழை பெய்யும்போது நுழைவு பாலத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அப்போது வாகனங்கள் மெதுவாக செல்வதால், காளைமாட்டு சிலை வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மேலும், மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே சாலையை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரெயில்வே நுழைவு பாலம் பகுதியில் விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

இந்தநிலையில் ரெயில்வே நுழைவு பாலத்தை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி சாலையை முழுமையாக சீரமைக்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதால், போக்குவரத்து மாற்றம் செய்வதற்கான பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். பூந்துறைரோட்டில் இருந்து ஈரோட்டுக்கு வரும் வாகனங்கள் நாடார்மேடு, சாஸ்திரிநகர், சென்னிமலைரோடு வழியாக பஸ் நிலையத்துக்கு செல்ல திட்டமிடப்பட்டு உள்ளது.

எனவே சாஸ்திரி நகர் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டன. மேலும், அந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்களுக்கு நோட்டீசு வினியோகிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிறார்கள்.

போக்குவரத்து மாற்றம்

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

ஈரோடு கொல்லம்பாளையம் ரெயில்வே நுழைவு பாலத்தில் ரூ.50 லட்சம் செலவில் சாலை சீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளது. இந்த பணிகள் வருகிற ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கப்படும். இதற்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. பணிகள் நடைபெறும்போது இருசக்கர வாகனங்களும், இலகுரக வாகனங்களும் இந்த வழியாகவே செல்வதற்கு ஏற்பாடு செய்யப்படும். பணிகள் நடைபெறும்போது இட வசதிக்கேற்ப முடிவு எடுக்கப்படும். இந்த பணிகள் 2 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story