சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்


சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
x

சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

திருப்பூர்

ஊத்துக்குளி

மழை காலம் தொடங்கும்முன்பு சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் மு.ெப.சாமிநாதன் உத்தரவிட்டார்.

ஆய்வுக்கூட்டம்

ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஊத்துக்குளி, குன்னத்தூர் பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் எஸ்.வினீத் தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பிரேமா ஈஸ்வரமூர்த்தி வரவேற்றார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லட்சுமணன், கலெக்டரின் வளர்ச்சி பிரிவு நேர்முக உதவியாளர் வாணி, ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் மதுமிதா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்சீனிவாசன், ஊத்துக்குளி பேரூராட்சி தலைவர் பழனியம்மாள் ராசுக்குட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்துகொண்டு பேசியதாவது:-

மழை காலம் தொடங்க இருப்பதால் சாலை பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். அனைத்து பொது மக்களுக்கும் குடிநீர் வசதி தடையின்றி கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊராட்சிகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலையங்கள் குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். கூட்டு குடிநீர் திட்டம் மூலம் முழு கொள்ளளவு தண்ணீரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

கொடிவேரி மற்றும் அவினாசி -அத்திக்கடவு திட்டத்தில் கூடிய விரைவில் நேரடியாக ஆய்வு செய்து விடுபட்ட பணிகள் சரி செய்யப்படவுள்ளது. திட்டங்கள் முழுமையாக பயனடையும் வகையில் அதிகாரிகள் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஏ.டி.எம். மையம்

முன்னதாக ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் ஊத்துக்குளி கிளையின் ஏ.டி.எம். எந்திரத்தினை அமைச்சர் திறந்து வைத்தார். பின்னர் 5 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் சிறுவணிகக்கடன்களும், 1 பயனாளிக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பீட்டில் முத்ரா கடனும், 3 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் மத்திய காலக்கடன்களும் என மொத்தம் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவிகளை அமைச்சர் வழங்கினார். மேலும் பொது மக்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். ஆய்வுக்கூட்டத்தில் ஊத்துக்குளி தாசில்தார் சைலஜா, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சாந்தி லட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோதிநாத், ஊத்துக்குளி பேரூராட்சி செயல் அலுவலர் இந்துமதி மற்றும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story