ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் சாலை விரிவுபடுத்தும் பணியால் கடும் போக்குவரத்து நெரிசல்


ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் சாலை விரிவுபடுத்தும் பணியால் கடும் போக்குவரத்து நெரிசல்
x

ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் சாலை விரிவுபடுத்தும் பணியால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஈரோடு

ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் சாலை விரிவுபடுத்தும் பணியால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

போக்குவரத்து நெரிசல்

ஈரோடு சுவஸ்திக் கார்னரில் இருந்து சத்திரோட்டில் சாலை விரிவுபடுத்தும் பணிகள் நடந்து வருகிறது. நேற்று காலை வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் அருகில் ஒரு பகுதியில் சாலையில் குழி தோண்டப்பட்டது. இதனால் அந்த வழியாக ஒருபுறம் மட்டுமே வாகனங்கள் செல்ல முடிந்தது. இதன் காரணமாக அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வீரப்பன்சத்திரத்தில் இருந்து சி.என்.கல்லூரி வரையும், மறுபுறம் சுவஸ்திக் கார்னர் வரையும் வாகனங்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருந்தன. காலை நேரம் என்பதால் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகளும், அலுவலகத்துக்கு செல்பவர்களும் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டார்கள்.

ஈரோடு பஸ் நிலையம்

இதேபோல் ஈரோடு பஸ் நிலையத்திலும் நேற்று காலை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அங்கு திருப்பூர், கோவை, பழனி உள்ளிட்ட ஊர்களில் இருந்து வரும் வாகனங்கள் அகில்மேடு வீதி வழியாக வந்து பஸ் நிலையத்துக்குள் நுழைகின்றன. அதேசமயம் கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பஸ்களும் வெளியேறுவதால் பஸ் நிலையத்தில் உள்ள நவீன கழிப்பிட கட்டிடம் அருகில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், கட்டுமான பணிகள் நடந்து வருவதால் சேலம், நாமக்கல், மதுரை, கரூர் உள்ளிட்ட ஊர்களுக்கு பயணிகளை ஏற்றக்கூடிய பஸ்கள், நவீன கட்டிட கழிப்பிடம் பகுதியிலேயே திருப்பி பின்னோக்கி சென்று நிறுத்த வேண்டி உள்ளது.

பஸ் நிலையத்தில் கட்டுமான பணிகள் நடந்து வருவதால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அதற்கு திருப்பூர், கோவை, ஊட்டி, பழனி, வெள்ளக்கோவில், கரூர், மதுரை உள்ளிட்ட ஊர்களில் இருந்து வரும் பஸ்களை மேட்டூர்ரோடு வழியாக ஈரோடு பஸ் நிலையத்துக்குள் வருமாறு போக்குவரத்து மாற்றம் செய்ய வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story