கடமலைக்குண்டுவில் ரூ.1 கோடியில் தார்சாலை அமைக்கும் பணி


கடமலைக்குண்டுவில் ரூ.1 கோடியில் தார்சாலை அமைக்கும் பணி
x

கடமலைக்குண்டுவில் ரூ.1 கோடியில் தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.

தேனி

கடமலை-மயிலை ஒன்றியத்திற்கு உட்பட்ட கடமலைக்குண்டு-அண்ணாநகர் இடையேயான சாலை சேதமடைந்து காணப்பட்டது. இதையடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று கடமலைக்குண்டு முதல் அண்ணாநகர் வரை புதிய தார்சாலை அமைக்க அரசு உத்தரவிட்டு, அதற்காக ரூ.1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.

இந்தநிலையில் கடமலைக்குண்டு-அண்ணாநகர் இடையே கடந்த 2 நாட்களாக புதிய தார்சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ரமேஷ், உதவி கோட்ட பொறியாளர் திருக்குமரன், உதவி பொறியாளர் முத்துராமன் ஆகியோர் ஆய்வு நேரில் ஆய்வு செய்தனர்.


Related Tags :
Next Story