திருத்துறைப்பூண்டியில், புறவழிச்சாலை பணிகள் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு


திருத்துறைப்பூண்டியில், புறவழிச்சாலை பணிகள் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
x
தினத்தந்தி 18 May 2023 12:45 AM IST (Updated: 18 May 2023 12:46 AM IST)
t-max-icont-min-icon

திருத்துறைப்பூண்டியில் புறவழிச்சாலை பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.

திருவாரூர்

திருத்துறைப்பூண்டியில் புறவழிச்சாலை பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.

புறவழிச்சாலை

போக்குவரத்து நெருக்கடியை தவிர்ப்பதற்காக திருத்துறைப்பூண்டி- நாகை சாலையில் இருந்து திருவாரூர் சாலையை இணைக்கும் வகையில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து திருவாரூர் சாலை வேளூர் பாலத்தில் இருந்து நாகை பைபாஸ் சாலை வரை 2.6 கி.மீ. புறவழிச்சாலை அமைப்பதற்கு ரூ.20.40 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது.

அமைச்சர் ஆய்வு

நெடுஞ்சாலைத்துறை சார்பில் புறவழிச்சாலை பணிகள் கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கி நடந்து வந்தது. தற்போது பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் புறவழிச்சாலை பணிகளை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு சாலையின் தரம் குறித்து ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து சாலையோரத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

அப்போது திருவாரூர் சாலையை மன்னார்குடி சாலை வழியாக முத்துப்பேட்டை சாலையோடு இணைக்கும் புறவழிச்சாலை-2 திட்டத்தை நிறைேவற்றக்கோரி மாரிமுத்து எம்.எல்.ஏ. அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தார்.

ஆய்வின்போது அரசு கூடுதல் தலைமை செயலாளர் பிரதீப் யாதவ், நகரசபை தலைவர் கவிதாபாண்டியன், தி.மு.க. நகர செயலாளர் பாண்டியன், மாநில முதல் நிலை ஒப்பந்ததாரர் கண்ணன், தாசில்தார் காரல்மார்க்ஸ், ஒன்றியக்குழு தலைவர் பாஸ்கர், ஒன்றிய ஆணையர் அன்பழகன், நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் ரவி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

1 More update

Next Story