சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
ஆற்காட்டில் சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆற்காடு
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆற்காட்டில் தாலுகா அலுவலகம் எதிரே மக்கள் சந்திப்பு அரசு ஊழியர் விழிப்புணர்வு பிரசார ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சாலை பணியாளர் சங்கத்தின் உட்கோட்ட தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.
மாவட்ட தலைவர் வெங்கடேசன். மாவட்ட செயலாளர் சிவசங்கரன், மாநில செயற்குழு உறுப்பினர் சேட்டு உள்பட பலர் முன்னிலை வகித்தனர். உட்கோட்ட செயலாளர் கோவிந்தராஜூலு வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக மாநில துணைப் பொதுச் செயலாளர் கா. பெருமாள் கலந்து கொண்டு 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்திட வேண்டும்.
இறந்த 300-க்கும் மேற்பட்ட சாலை பணியாளர்கள் குடும்பங்களில் அவர்களது வாரிசுகளுக்கு வேலை வழங்கிட வேண்டும். பொங்கல் போனஸ் ரூ.10 ஆயிரம் வழங்கிட வேண்டும்.
அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு 2021 ஏப்ரல் முதல் வழங்க வேண்டிய ஓய்வூதிய பலன்களை வழங்கி அவர்களது குடும்பங்களை பாதுகாத்திட வேண்டும் என வலியுறுத்தி பேசினார்.
முடிவில் உட்கோட்ட பொருளாளர் சரவணன் நன்றி கூறினார்.