சாலை பணியாளர்கள் பேரணி


சாலை பணியாளர்கள் பேரணி
x
தினத்தந்தி 19 Jun 2023 8:30 PM GMT (Updated: 19 Jun 2023 8:30 PM GMT)

சாலை பணியாளர்கள் பேரணி

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் 8-வது கோட்ட மாநாடு, பொள்ளாச்சி வங்கி ஊழியர் சங்க கட்டிடத்தில் நடந்தது. அரசு ஊழியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ரவி தொடங்கி வைத்தார். கோட்ட தலைவர் வெற்றிவேல் தலைமை தாங்கினார். துணை தலைவர் வெள்ளிங்கிரஅஞ்சலி தீர்மானம் வாசித்தார். அதில் ஊதியத்தில் 10 சதவீதம் ஆபத்து படி வழங்குவது, 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்துவது, காலிப்பணியிடங்களை நிரப்புவது, வாரிசுகளுக்கு வேலை வழங்குவது, பொள்ளாச்சி கோட்டத்தில் ஆண்டுதோறும் முறையான முதுநிலை பட்டியல் வெளியிட்டு தகுதியுள்ளவர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக அந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடத்தப்பட்டது. மாநாட்டில் துணை தலைவர் வீரமுத்து வரவேற்றார். மாநில தலைவர் பாலசுப்ரமணியம் கலந்து கொண்டு பேசினார். முடிவில் மாநில பொதுச்செயலாளர் அம்சராஜ் நன்றி கூறினார். இதில் கோட்ட செயலாளர் ஜெகநாதன், பொருளாளர் சின்னமாரிமுத்து மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story