தார் சாலை அமைக்கும் பணி


தார் சாலை அமைக்கும் பணி
x

குறிச்சி, பாலத்தளி ஊராட்சிகளில் தார் சாலை அமைக்கும் பணியை தார் சாலை அமைக்கும் பணி நடந்தது

தஞ்சாவூர்

திருச்சிற்றம்பலம்;

திருச்சிற்றம்பலம் அருகே குறிச்சி ஊராட்சி உள்ளது. இங்குள்ள ஜோதிபுரம் பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க ரூ.5 லட்சமும் பாலத்தளி ஊராட்சி மணவயல் குடியிருப்பு பகுதிக்கு தார் சாலை அமைக்க ரூ. 2.40 லட்சமும் மாவட்ட கவுன்சிலர் ஆலிவலம் மூர்த்தி நிதி ஒதுக்கீடு செய்திருந்தார். இதைத்தொடர்ந்து பணிகள் தொடங்குவதற்கான பூமி பூஜை நேற்று குறிச்சி கிராமத்தில் நடைபெற்றது. மாவட்ட கவுன்சிலர் ஆலிவலம் மூர்த்தி பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். பேராவூரணி வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் இளங்கோவன், ஆலிவலம் ஒன்றியக்குழு உறுப்பினர் நவநீதம் ஆறுமுகம், குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் வைரக்கண்ணுக்கு கருப்பையா, சமூக ஆர்வலர் தியாகராஜன், கிராம நிர்வாக அலுவலர்கள் சாந்தலிங்கம், ரவிச்சந்திரன், ஊராட்சி துணைத் தலைவர் சின்னையன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


Next Story