விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்


விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்
x

வெண்ணந்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நாமக்கல்

வெண்ணந்தூர்

வெண்ணந்தூரில் பெரியார் பிறந்தநாளையொட்டி பல இடங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது. இந்தநிலையில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்த தினத்தையொட்டி பெரியாருக்கு ஒட்டப்பட்டிருந்த போஸ்டர் மீது நரேந்திர மோடி வாழ்த்து போஸ்டரை ஒட்டி உள்ளனர். அதனை கண்டித்து வெண்ணந்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட காமராஜர் சிலை அருகே வெண்ணந்தூர்-ராசிபுரம் செல்லும் பிரதான சாலையில் நேற்று காலை விடுதலை சிறுத்தை கட்சியினர் திடீரென சாலையில் நின்று கோஷமிட்டு மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த வெண்ணந்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போஸ்டர் ஒட்டியவர் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் போக்குவரத்து நெரிசலை சீர்படுத்தினர்.


Next Story