குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்


குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
x

அஞ்செட்டி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:

அஞ்செட்டி தாலுகா நாட்றாம்பாளையம் ஊராட்சி கள்ளூர் பள்ளம், ஆசமரத்து கொட்டாய், பெரிய பையன்கொட்டாய் ஆகிய கிராமங்களில் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் குடிநீர் இல்லாமல் மக்கள் சிரமத்திற்குள்ளாகினர். இதுகுறித்து அதிகாரிடம் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நேற்று குடிநீர் கேட்டு நாட்றாம்பாளையம் பஸ் நிறுத்தத்தில் காலிக்குடங்களுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் வருவாய்தறை அதிகாரிகள் விரைந்து வந்து குடிநீர் வசதி செய்து தர உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். சாலை மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story