பொதுமக்கள் சாலை மறியல்

பேரிகை அருகே மாயமான டிரைவர் கொலை செய்தவர்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.
கிருஷ்ணகிரி
சூளகிரி:
ஓசூரை அடுத்த பேரிகை அருகே முக்காலபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நாகேஷ் (வயது35), பிக்கப் வேன் டிரைவர். இவர் கடந்த 8-ந் தேதி திடீரென மாயமானார். இந்த நிலையில் நேற்று முன்தினம், அத்திமுகத்தில் ஒரு தாபா ஓட்டல் பின்புறம் அழுகிய நிலையில் அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனால் நாகேஷ் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், கொலையாளிகளை கைது செய்யக்கோரியும், பொதுமக்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர் சிவா தலைமையில் கட்சியினர் நேற்று அத்திமுகத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story






