கிராம மக்கள் சாலை மறியல்
சூளகிரி அருகே இறந்த மூதாட்டியின் எடுத்து செல்ல எதிர்ப்பு தெரிவித்ததால் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி
சூளகிரி
சூளகிரி அருகே சிவசிகரலபள்ளி கிராமத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் இறந்தார். இதையடுத்து அவரது உடலை அடக்கம் செய்ய குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் மயானத்தில் அடக்கம் செய்ய எடுத்து சென்றனர். இதற்கு எரிக்கரையோரம் உள்ள பட்டா நிலத்துக்காரர்கள் வழிவிட எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த சூளகிரி தாசில்தார் அனிதா மற்றும் போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் மூலம் மயானத்திற்கு செல்ல பாதை அமைத்தனர். பின்னர், மூதாட்டியின் உடல் மயானத்திற்கு எடுத்து சென்று அடக்கம் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story