செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு:பொது மக்கள் சாலை மறியல்


செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு:பொது மக்கள் சாலை மறியல்
x

மல்லசமுத்திரத்தில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நாமக்கல்

எலச்சிபாளையம்

மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்திற்குட்பட்ட, பெரியகொல்லப்பட்டி பகுதியில் குடியிருப்புகள், அரசு பள்ளி அமைந்துள்ளது. இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த சிலர் பஞ்சாயத்து சாலையையொட்டி விவசாய நிலத்தில் எவ்வித அனுமதியும் பெறாமல் சட்டத்திற்கு புறம்பாக செல்போன் கோபுரம் அமைக்கும் பணிநடந்து வருகிறது. இதையறிந்த அந்த பகுதி மக்கள் செல்போன் கோபுரம் அமைத்தால் பெண்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்களுக்கு சுகாதார சீர்கேடு, உடல்நலம் பாதிப்பு, சுற்றுசூழல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இது சம்பந்தமாக, பஞ்சாயத்திலும், அங்கு வசிப்பவர்களிடமும் எவ்வித முன்அனுமதியும் பெறாமல் பணிநடந்துவருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மல்லசமுத்திரம்-மாமுண்டி செல்லும் பெரியகொல்லப்பட்டி மெயின்ரோடு பஸ் நிறுத்தம் பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த மல்லசமுத்திரம் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகளிடம் முறையான தகவல் தெரிவித்து உரியமுறையில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். பின்னர் சாலை மறியலை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story