தி.மு.க.-அ.தி.மு.க. இடையே தகராறு; சாலை மறியல்


தி.மு.க.-அ.தி.மு.க. இடையே தகராறு; சாலை மறியல்
x
தினத்தந்தி 18 Feb 2023 12:15 AM IST (Updated: 18 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பர்கூர் அருகே தி.மு.க.-அ.தி.மு.க. இடையே தகராறு ஏற்பட்டதால் சாலைமறியல் நடந்தது.

கிருஷ்ணகிரி

பர்கூர்

பர்கூர் அருகே தி.மு.க.-அ.தி.மு.க. இடையே தகராறு ஏற்பட்டதால் சாலமறியல் நடந்தது.

சுவர் விளம்பரம் அழிப்பு

பர்கூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அ.தி.மு.க.வினர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து கூறி சுவர் விளம்பரங்கள் எழுதி வருகின்றனர். சிகரலப்பள்ளியில் நீரேற்று மின் மோட்டார் அறையைச் சுற்றிலும் அ.தி.மு.க.வினர் சுவர் விளம்பரங்களை எழுதி வைத்துள்ளனர்.

இந்தநிலையில் தி.மு.க.வை சேர்ந்த சிகரலப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் பார்த்திபன் கூறியதாக மின்மோட்டார் ஆபரேட்டர் சுப்பிரமணி ஜெயலலிதா பிறந்தநாள் சுவர் விளம்பரங்களை அழித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் அ.தி.மு.க. முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் முருகன் மற்றும் கட்சியினர் தி.மு.க. சுவர் விளம்பரங்களை மட்டும் அழிக்காமல், அ.தி.மு.க. சுவர் விளம்பரங்களை ஏன் அழிக்கிறீர்கள் என கேட்டுள்ளனர்.

சாலை மறியல்

அப்போது அங்கு வந்த தி.மு.க. வினருக்கும்,அ.தி.மு.க. வினருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அ.தி.மு.க.வினர் சிகரலப்பள்ளி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு பர்கூர்- திருப்பத்தூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் பர்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சவிதா மற்றும போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அ.தி.மு.க.வினர் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றதனர். மறியல் காரணமாக அந்த பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story