வியாபாரிகள் சாலை மறியல்
மத்தூர் அருகே வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி
மத்தூர்
மத்தூரில், கிருஷ்ணகிரி திண்டிவனம் சாலையில், நாகம்பட்டி போயர்கொட்டாய் பகுதியில் இருந்து 4.33 கிலோ மீட்டர் தூரத்திற்கு கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியின் போது கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்களிடம் பணம் வாங்கி ெகாண்டு முன்னுரிமை அளித்து கழிவுநீர் கால்வாய் அமைப்பது கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த முறைகேட்டை கண்டித்து வியாபாரிகள் மத்தூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மத்தூர் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து விசாரணை நடத்தி முறையாக கழிவுநீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து வியாபாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story