ஓய்வூதியர் சங்கத்தினர் சாலைமறியல்


ஓய்வூதியர் சங்கத்தினர் சாலைமறியல்
x
தினத்தந்தி 1 Dec 2022 7:30 PM GMT (Updated: 1 Dec 2022 7:30 PM GMT)

ஓசூர்- ராயக்கோட்டை சாலையை சீரமைக்கக்கோரி ஓய்வூதியர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது தரையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி

ஓசூர்:-

ஓசூர்- ராயக்கோட்டை சாலையை சீரமைக்கக்கோரி ஓய்வூதியர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது தரையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சாலையில் பள்ளம்

ஓசூரில் ராயக்கோட்டை சாலையில் மின்வாரிய அலுவலகம் எதிரிலும், அங்குள்ள ஒரு தியேட்டர் அருகில் உள்ள நடுரோட்டிலும் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பலர் விழுந்து காயமடைந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதே பள்ளத்தில் வருவாய் துறையில் தாசில்தாராக பணியாற்றி ஓய்வு பெற்ற தாஸ் என்பவர் வாகனத்தில் செல்லும்போது விழுந்து உயிரிழந்தார்.

சாலைமறியல்

அவரது உயிரிழப்புக்கு நியாயம் கேட்டு்ம், பொதுமக்களின் கோரிக்கையை வலியுறுத்தும் வகையிலும் தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் மாவட்டத் தலைவர் ஆர்.துரை தலைமையில் மின்வாரிய அலுவலகம் எதிரில் சாலைமறியல் போராட்டம் நடந்தது. அப்போது இறந்த தாஸ் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். பள்ளத்தை மூட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.அப்போது சாலையில் தரையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story