போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகள்
சீர்காழியில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகள்
சீர்காழி:
சீர்காழியில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளின் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று சீர்காழி நகரசபை தலைவர் கூறினார்.
போக்குவரத்து இடையூறு
சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட தென்பாதி, மயிலாடுதுறை சாலை, புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள் சுற்றித்திரிகின்றன.
நடந்து செல்லும் மாணவர்களை கால்நடைகள் முட்டி கீழே தள்ளி விடுகின்றன. போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
உரிமையாளர்கள் மீது நடவடிக்கை
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், 'கால்நடைகளை உரிமையாளர்கள் முறையாக பராமரிப்பது கிடையாது. மாறாக சாலையில் விடுவதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. சீர்காழி நகராட்சி நிர்வாகம் அவ்வப்போது சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து வருகிறது. ஆனால் இதனை கால்நடை உரிமையாளர்கள் ஒரு பொருட்டாக நினைக்காமல் மீண்டும் கால்நடைகளை சாலையில் விடுகின்றனர்' என்றனர்.