பாலக்கோட்டில் துணிகரம்: பைனான்ஸ் நிறுவன பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் திருட்டு மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு


பாலக்கோட்டில் துணிகரம்:  பைனான்ஸ் நிறுவன பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் திருட்டு  மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 30 Sept 2022 12:15 AM IST (Updated: 30 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பாலக்கோட்டில் துணிகரம்: பைனான்ஸ் நிறுவன பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் திருட்டு மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு

தர்மபுரி

பாலக்கோடு, செப்.30-

பாலக்கோட்டில் பைனான்ஸ் நிறுவன பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் திருடிய மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பைனான்ஸ் நிறுவனம்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள குள்ள பெருமாள் தெருவை சேர்ந்தவர் செந்தில் (வயது 42). இவர் தீர்த்தகிரி நகரில் பைனான்ஸ் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு செந்தில் வழக்கம்போல் பைனான்ஸ் நிறுவனத்தை மூடி விட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் நேற்று காலை மீண்டும் பைனான்ஸ் நிறுவனத்துக்கு வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

ரூ.1 லட்சம் திருட்டு

இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்குள்ள லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து செந்தில் பாலக்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை ஆய்வு செய்தனர்.

வலைவீச்சு

அதில் நேற்று அதிகாலை மர்ம நபர் ஒருவர் பைனான்ஸ் நிறுவனத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்று லாக்கரில் இருந்து பணத்தைத் திருடி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது தெரியவந்தது. இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர். பைனான்ஸ் நிறுவன பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் திருடு போன சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story