நாடியம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பட்டுக்கோட்டை,
பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
நாடியம்மன் கோவில்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் பிரசித்தி ெபற்ற நாடியம்மன் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் கடந்த பங்குனி மாதம் திருவிழா நடந்தது.விழாவில் கலந்து கொண்ட திரளான பக்தர்கள் கோவில் உண்டியலில் காணிக்கை செலுத்தி இருந்தனர்.உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
நேற்று முன்தினம் நள்ளிரவில் யாரோ மர்ம மனிதர்கள் கோவில் சுவர் ஏறி குதித்து அங்கிருந்த 2½ அடி உயரமுள்ள எவர்சில்வர் உண்டியலை பெயர்த்து எடுத்தனர்.பின்னர் அந்த உண்டியலை கோவிலில் இருந்து சுமார் 500 அடி தூரம் உள்ள வயலுக்கு ெகாண்டு சென்று வயலில் வைத்து உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து விட்டு உண்டியலை மட்டும் அங்கேயே போட்டு விட்டு சென்று விட்டனர்.
கண்காணிப்பு கேமரா பதிவு
நாடியம்மன் கோவிலில் திருவிழாவுக்கு பின் உண்டியலை திறந்து பணம் எண்ணப்படவில்லை. இதனால் உண்டியலில் ஆயிரக்கணக்கில் பணம் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது முகமூடி அணிந்த மர்ம நபா்கள் 2 பேர் உண்டியலை பெயர்த்து தூக்கிக்கொண்டு வெளியில் செல்வது தெரிய வந்தது.இது குறித்து பட்டுக்கோட்டை நகர போலீசில், கோவில் செயல் அலுவலர் சுந்தரம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
பரபரப்பு
பட்டுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற கோவிலில் மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்துச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.