உளுந்தூர்பேட்டை அருகேவிவசாயி வீட்டில் ரூ.16¼ லட்சம் நகை, பணம் கொள்ளைமர்ம மனிதர்கள் கைவரிசை


உளுந்தூர்பேட்டை அருகேவிவசாயி வீட்டில் ரூ.16¼ லட்சம் நகை, பணம் கொள்ளைமர்ம மனிதர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 21 July 2023 12:15 AM IST (Updated: 21 July 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அருகே விவசாயி வீட்டில் ரூ.16¼ லட்சம் நகை, பணம் கொள்ளையடித்த மர்ம மனிதர்களை போலீசாா் தேடி வருகின்றனா்.

கள்ளக்குறிச்சி


உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எலவனாசூர் கோட்டை பகுதியை சேர்ந்தவர் தங்கராசு (வயது 50). விவசாயி. சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு வயலுக்கு சென்றார். அவரது மனைவி மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் வேலை செய்வதற்காக சென்றுவிட்டார். வேலை முடிந்து, இருவரும் மாலையில் வீட்டுக்கு வந்தனர். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தங்கராசு எலவனாசூர் கோட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் திருமால் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்தை நேரில் பாா்வையிட்டு, தங்காரசுவிடம் விசாரித்தனர்.அதில், வீட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம மனிதர்கள், பீரோவில் இருந்த 39 பவுன் நகை, ரூ.70 ஆயிரத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.16¼ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story