ஆசிரியை வீட்டில் ரூ.10 ஆயிரம் கொள்ளை


ஆசிரியை வீட்டில் ரூ.10 ஆயிரம் கொள்ளை
x
தினத்தந்தி 15 Nov 2022 12:15 AM IST (Updated: 15 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மேட்டுப்பாளையத்தில் ஆசிரியை வீட்டில் ரூ.10 ஆயிரம் கொள்ளை போனது. மேலும் 2 வீடுகளில் திருட்டு முயற்சி நடந்தது.

கோயம்புத்தூர்

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையத்தில் ஆசிரியை வீட்டில் ரூ.10 ஆயிரம் கொள்ளை போனது. மேலும் 2 வீடுகளில் திருட்டு முயற்சி நடந்தது.

பூட்டு உடைப்பு

காரமடை ஆசிரியர் காலனி ரங்கராஜ் லே அவுட்டை சேர்ந்தவர் யமுனா(வயது 52). மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றுகிறார்.

இவர் சம்பவத்தன்று தனது வீட்டை பூட்டிவிட்டு மேட்டுப்பாளையம் நடூரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள் பீரோவில் இருந்த ரூ.10 ஆயிரத்தை கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.

மேலும் அந்த ஆசாமிகள், அருகில் வசிக்கும் எலிசா என்பவரது வீட்டு கதவையும் உடைக்க முயற்சித்தனர்.

கண்காணிப்பு கேமரா

ஆனால் பூட்டை உடைக்க முடியாததால், அந்த முயற்சியை கைவிட்டு, அடுத்த தெருவில் உள்ள சிக்கதாசம்பாளையம் ஊராட்சி ஆசிரியர் காலனியை சேர்ந்த நகைக்கடை அதிபர் முகமது மொய்தீன்(47) என்பவரது வீட்டுக்குள் புகுந்தனர்.

தொடர்ந்து முன்பக்க கண்காணிப்பு கேமராவை உடைத்துவிட்டு, திருட்டு சம்பவத்தில் ஈடுபட முயன்றனர். சத்தம் கேட்டு எழுந்த அவர், கூச்சலிட்டதால் அந்த ஆசாமிகள் தப்பி ஓடினர்.

இதை அறிந்ததும் மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நவநீதகிருஷ்ணன், குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வநாயகம், முருகநாதன், சுல்தான் இப்ராஹிம் மற்றும் போலீசார் நேரில் சென்று விசாரணை செய்தனர்.

தேடுதல் வேட்டை

மேலும் முகமது மொய்தீனின் வீட்டில் உள்ள மற்றொரு கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அடுத்தடுத்து 3 வீடுகளில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story