மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி


மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி
x

மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றிகரமாக நடந்தது.

திருநெல்வேலி

பணகுடி:

நெல்லை மாவட்டம் காவல்கிணறு மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் விண்வெளிக்கு செயற்கைகோள்கைளை அனுப்புவதற்கான ராக்கெட்டுகளுக்கான கிரையோஜெனிக் என்ஜின்கள் தயாரிக்கப்பட்டு பல்வேறு கட்ட பரிசோதனைகள் நடத்தப்படுகிறது. தற்போது தனியார் நிறுவனங்களும் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட மத்திய அரசு அனுமதித்த நிலையில், ஐதராபாத்தைச் சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனமான 'ஸ்கைரூட்' என்ற விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் 'ராமன்-2' என்ற ராக்கெட் என்ஜின் மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் தயாரிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.

இருகட்டங்களாக ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றிகரமாக நடந்தது. ராக்கெட் என்ஜின் முதல்கட்டமாக 10 வினாடிகளும், 2-வது கட்டமாக 110 வினாடிகளும் இயக்கி வெப்பசோதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து 'ராமன்-2' என்ஜினின் திறன்களை மேலும் சரிபார்த்து செம்மைப்படுத்தும் வகையில், பல்வேறு கட்டங்களாக கூடுதல் பரிசோதனை நடத்த உள்ளதாக இஸ்ரோ மைய வட்டாரங்கள் தெரிவித்தன.


Next Story